ஆதாரும் அடையாள நெருக்கடியும்

மனதின் அடிப்படை இயல்பான உணர்வு – தேடல் . தான் தானாக இயங்காமல் , தான் யார் என்று அறிவதற்கான தேடல் . அத்தேடலில் தன்னை எளிதாக அடையாளம் காண பல பிரிவினைகளை தானே ஏற்படுத்தி மற்றதிடமிருந்து தன்னையே தனித்து பிரித்து தான் என்ற அடையாளத்தை தானே உருவாக்கிக் கொள்கிறது .

ஒரு நாட்டின் குடிமகன் என்பதையும் தனக்கொரு அடையாளமாக கொண்டு , அந்த அடையாளத்தைக் கொள்வதற்கு தானே உலகை பல நாடுகளாக பிரித்து தன்னை தனித்துக்கொள்வது மனது . தான் எனும் உணர்வை இன்னும் மேம்படுத்த , அந்நாட்டுக்குள்ளயே பல அடையாள அட்டைகளை தானே உருவாக்கியது . குடிமகன் என்பதற்கு ஒரு அட்டை , குடும்பம் என்பதற்கு ஒரு அட்டை , வாக்களிப்பதற்கு ஒரு அட்டை , வங்கியில் கணக்கு வைக்க ஒரு அட்டை , தான் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தன்னுடன் சேர்ந்து அடையாளப்படுத்திக்க ஒரு அட்டை , அதை வெவ்வேறு உருவங்களிலும் தானே வைத்துக்கொண்டு , தன்னையே தான் என்பதை உணர்ந்ததாக நம்பவைத்து தன்னையே ஆழமற்ற அடையாளங்கள் கொண்டு ஏமாற்றிக்கொள்கிறது .

ஆதார் அட்டை எனும் ஓர் அடையாளஅட்டை , மற்ற அடையாளங்களை எல்லாம் அதற்குள்ளே அடக்கி , மற்ற அட்டைகளை உபயோகம் இன்றி செய்து , ஒற்றே அடையாளம் கொள்ளச் செய்யும் முயற்சி . தான் என்ற பொய் அடையாளத்தை தானே நம்புவதற்கு கொண்ட பல ஆவணங்கள் மறைந்து , ஒற்றே அடையாளம் இருந்தால் ஏற்குமோ மனது ? தான் என்ற தேடல் மேலும் அதிகரிக்குமோ ? தான் என்ற எண்ணம் கேள்விக்குறி ஆகுமோ ?

அதுவும் ஆதார் அட்டை தன் அடையாளத்திற்கு அத்தாட்சியாய் அமையாமல் , தான் கொண்ட அடையாளத்தை நொறுக்கி , தனக்கு புதிதாய் ஒரு அடையாளத்தை தருகிறதே . தான் கண்ட அடையாளங்கள் எல்லாம் புதிதாய் உருவாகும் அடையாளத்தின் கிளைகளாக அல்லவோ அமைகின்றன . ஏற்குமோ மனது இதை ? நாடு , பெயர் , விலாசம் என மேலும் பல அடையாளங்கள் கொண்டிருந்த மனதை வெறும் ஓர் எண்ணாக வைக்கையில் , மனது தான் இதுவரை கொண்ட அடையாளங்கள் எல்லாம் பொய் எனும் உண்மையை ஏற்குமோ ? எண்ணையும் பொய் என கருதி , பின்பு அந்த எண்ணையே தன் அடையாளமாய் ஏற்குமோ ?

பெரும் உற்பத்திச்சாலைகளில் உருவாக்கப்படும் பொருட்கள் போல , அங்கு அங்கு இருக்கும் பன்னாட்டு அங்காடிகளில் அடுக்கப் பட்ட பொருட்கள் கொண்ட பட்டை குறியீடு (bar code) அதற்கான எண் போல ஆதார் எண் அமைவதை ஏற்குமோ ? தான் உருவாக்கிய அடையாளங்களை பொருட்படுத்தாமல் , தன் மேல் திணிக்கப்பட்ட அடையாளத்தை எவ்வாறு ஏற்கத் தோணும் ? ஏற்காமல் இன்னும் தொலைந்து மேலும் பிரிவினைகள் ஏற்படுத்தி புதியதாய் இன்னும் ஆழமற்ற அடையாளத்தை உண்டாக்குமோ ? தனிப்பட்ட எண்களின் தொடரை விட இன்னும் தன்னை தனிப்படுத்தி காட்ட ஏதும் புது அடையாளத்தை நாம் காண்போமா ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Built with WordPress.com.

Up ↑

%d bloggers like this: