மலருக்கு மலர்வளையம்

மொட்டு . மலர் . பூத்தது . வாடியது .
“அவள் முகம் மலர் போல்… ”
“அவள் இதழ் இதழ் போல்…”
“அவளை பார்த்ததும் என் மனதில் காதல் பூத்தது…”
“உலகின் சிறந்த பூ சிரிப்பு…”
என எல்லாம் சொன்னால், இன்று சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வருவதில்லை .

பலருக்கு பூக்களின் பெயர்களே வெகு சில தான் தெரியும் .மல்லிப்பூ ஏதோ இன்னும் அங்க அங்க சினிமால வரதுனாலயும் , வீட்ல வாங்குவதாலும். ரோஜாப்பூ உலகில் காதலின் சின்னம் ஆக்கியதால். தாமரை, “மலருமா?  மலராதா?”  என்பதனால் .

காலம் மாறியது , நகரமும் முன்னேறியது , தோட்டம் இறந்தது , மலர்கள் மாண்டன. மலர்களை புகைப்படம் எடுப்பது சலிப்பு தட்டியது. மலர்களை backgroundஆக வைப்பவரை பார்த்தவுடன் அவர் யார் என்று நாமே ஒரு கதை எழுதுகிறோம்.

கடைசியாய் நாம் ஒரு மலரை செடியில் கண்டது எப்பொழுது? எங்கே?
கடைசியாய் நாம் கண்ட செடியின் பெயர் என்ன? எவ்வளவு செடியின் பெயர்கள் நாம் அறிவோம்?

இயற்கையிடம் இருந்து விலகி விட்டோம்.
ரசாயனம் கலந்து மண்ணை கெடுத்துவிட்டோம்.
மண்ணை சிமெண்ட்டால் புதைத்து கொன்றுவிட்டு அதன் மீது பூந்தொட்டி வைத்துள்ளோம் .

பூக்களை பாக்காததனால்,
முன்புபோல் தேனியை பார்ப்பதில்லை,
பட்டாம்பூச்சியையும் துரத்தி பிடிக்க முயல்வதில்லை.

வாழ்க்கையின் வேகத்தில் செடியை வேருடன் அறுத்து.
இலையை ஒவ்வொன்றாய் கிழித்துப்போட்டு.
பூக்களை,
அதன் ஒவ்வொரு இதழையும் கிழித்து,
அதன் பிறப்புறுப்பைகளை சூறையாடி கற்பழித்து,
எதுவுமே நடக்காததுபோல் சென்றுகொண்டிருக்கிறோம்.

வாடும் என்று தெரிந்து அதை பிளாஸ்டிக்கில் செய்து வைத்துள்ளோம்.கடைசியில் அதை இழந்தோம்.
நாமும் இறப்போம் என அறிந்து robot செய்துள்ளோம் . இனி நாம் எதற்கு ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Built with WordPress.com.

Up ↑

%d bloggers like this: