சில நேரம்

சில நேரம் மழை முடிந்து ஈர மண்ணுடன் மணமும் மஞ்சளுடன் சிவப்பு பூசிய வானும் யாருமில்லா தெருக்களும் இதழை வருடிச் செல்லும் காற்றும் காதலாக இல்லாமல் வெறும் இயற்கையாகவும் இருக்கலாம்

குற்ற விழி

நீராய் ஓடும் பனியாய் உறையும். மாறியததன் நிலையே, அதை பிரித்து, குற்றம் செய்ததிரு விழியே.

Nenjam undu Nermai Undu || அஇஇஅ #1 ||

முழு video காண : https://youtu.be/VdthaHg-w_o நாம் என்ற உணர்வு நாம் பெறாமல் , அடிமைத்தனத்தை ஒருவிதத்தில் நாமும் ஆதரிக்கிறோம். நம் வாழ்க்கையை நமக்காக வாழாது, வேறு ஒருத்தரின் கனவுக்காக உழைப்பது எப்படி நமக்காக வாழ்வதாகும்? நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா , "என் அண்ணன்" படத்தில் MGR நடித்து , K V Mahadevan இசை அமைத்து , Kannadasan எழுதி , TMS பாடிய காவியப்பாடல். அதை இன்றைய சூழலுக்கும் பொருந்தும்... Continue Reading →

பார் மெய்

இரு விழி உன்னையே ஏமாற்றி ஒரு பார்வையை தரும் வரை பிரிவினை அழிவை காணாது .

#include உங்களுடன் எங்களையும்

மனம் சிந்தனைகளை செயல்படுத்தும் ஒரு மனிதன் அறியா கருவி . மனதின் செயல்பாடோ அதின் கருவோ அல்லது தொடக்கம் , முதல் எண்ணம் , சிந்தனை என்னவென்று தானே அறியாது இருக்கும் . கணினிக்குள் இருக்கும் செயலி (processor) போல் மனதும் , அதன் கூடாக உடலும் . செயலிக்குள் செயல்படும் நிரல் மொழி போலவே . ஒரு நிரலராக (Programmer) நிரலுக்கு ஒரு நெறிமுறையை உருவாக்கி , அந்த நிரல் மொழியை, தானும் பேசாத வாய்... Continue Reading →

நீரடி

நீர் அடியோ மனம் அது போல் தனக்கென தனி உலகம் கொள்ளும் அது வழியே பார்ப்பதனால் உலகமெல்லாம் கலங்கிருக்கும், அய்யோ, இரு விழியால் பார்ப்பதென்றால் பொய் உலகம் மெய் உருவம் மனததனால் மெய் மறையும்

புதியது

வருடங்கள் பல புதிதாய் வயதேற மாதங்கள் பல புதிதாய் புவி இடம் மாற நாட்கள் பல புதிதாய் ஓர் தாள் தோன்ற நொடிகள் பல புதிதாய் சுவாசம் உயிர் வாழ இருந்தும் புதிதை புசிக்காது வருவதை கனவாக்கி இருப்பதை களவாடி புதிதை பழையதாக்கி பருகும் மது விரும்பும் ம-நா-கள்.

நன்றி – கவிதை திருவிழா

Poetry with Prakriti. சென்ற வாரம் துவங்கி 17ஆம் தேதி வரை நடந்துக்கொண்டிருக்கும் கவிதை திருவிழா . அதில் உலகின் மிகச் சிறந்த தற்கால கவிஞர்களோடு நானும் ஒருவனாக இருக்க மிகவும் பெருமிதம் கொண்டேன் . மொத்தம் 7 இடங்களில் வாசித்தேன் . உடுக்கை உடன் நான் . Ethiraj கல்லூரியில் Delhi-இல் இருந்து வந்த Navkirat sodhi உடன் . அடுத்த நாளே Writer's Cafe-இல் பொது மக்களுக்கு Navkirat உடனும் Ashwani kumar உடனும்... Continue Reading →

புவியர்

புவி வாழ் புவியர் பனி போல் அவரை புனிதாய் காட்ட மலை போல் சுமையை கடல் ஆழ் மறைத்து தன்னை தன்னிலே புதைப்பவரே

அ(ம்)மு(த்)த ரசம்

மது நிரம்பி உதிரம் அமுதமாக, நடை தவறி மொழி மறைந்தாலும், கோப்பை கவி பாடி அழைக்கும் என் இதழ் ரசம் பருக.

Website Built with WordPress.com.

Up ↑