அலையே – A Poetry Film

As the waves kiss the hands, and legs caress the shore, relationships, thoughts, life, time, everything is wrapped up inside the bubble that forms at the juncture. Does it actually exist?

ஒரு நாள் . மதியம் 3 மணி அளவில் , பெசன்ட் நகரில் உள்ள elliot’s beach-இல். நான் தனியாக. இடுப்பு அளவு உயரமாய் கரையில் மண் குன்றி நிற்க . சறுக்கி , என் காலுடன் முனைகளையும் உடைத்து இறங்கினேன் , கடலின் உயரத்திற்கு . வெயில் வருடிச் செல்ல . காற்றும் அலையும் சேர்ந்து ஒலிப்பது , போர்வைக்குள் உருண்டு , உதடும் நாவும் செவிகளை உண்ணும் உணர்வு . குறைந்தது 40 நிமிடம் இருந்திருப்பேன் அந்நிலையில் . பின் நடந்து , அலைபேசியை எடுத்து எழுதிய கவிதையே இது.

அலையே

பால் என எண்ணி
கால்கள் நனைத்தால்
நுரையாய் வந்தது
அலையே

நின்ற இடத்தில்
கால் தடம்
பதித்தால்
மண்ணால்
புதைப்பதும்
அலையே

புதைந்த காலை
வெளியே எடுத்தால்
சுத்தம் செய்வதும்
அலையே

விட்டுச் சென்ற
கால் தடம் எல்லாம்
மறைக்கும் வரும்
புது அலையே

அலையே நிரந்தரம்
என்று நினைத்தால்
மறைந்தது கால்
தொட்ட அலையே

நிரந்தரமானது
எதுவென பார்த்தால்
முடிவில்லா பெரும்
கடலே

அந்த
கடல் போல்
காதல்
உணர்வே
அந்த அலை போல்
வரும் பல உறவே

எழுதியபின் , அதை படிக்கும் பொழுதும் , பலரிடம் பகிரும் பொழுதும் , இக்கவிதை ஒவ்வொருவருக்கும் அவர் அவர் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பொருந்துகிறது என அறிந்து , அதில் இருக்கும் சில முக்கியமான உணர்வுகளையும் , நிகழ்வுகளையும் மூன்றாக்கி .

1. உருவாக்கம் என்று ஒருவன் எழுதுவதையும்
2. உறவு என்று காதலையும்
3. தான் , நிகழ்வு என்பதை cigarette ஆகவும்
உருவகப்படுத்தி . படம் ஆக்கலாம் என்று எடுத்த முயற்சியே இது .

கீழ் உள்ள அனைவரின் உழைப்பாலும், அன்பாலும், உதவியாலும் இந்த படம் உருவானது.

Cinematography : Vignesh
Music : Siennor
SFX & Mixing : Balakesavan Shanmugam
Cast : Hari Prasath, Janavi Nagarajan
Coloring : Sathya
Foley : Purushottaman
Translation : Bhuvaneshwari
Thanks : Raveena, Srini, Ishvaria, ArunKumar

படத்தின் Link :

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Built with WordPress.com.

Up ↑

%d bloggers like this: